திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

செயல்பாட்டுக்கு வந்ததுவார இறுதி நாள்கள் பொது முடக்கம்

புதுவையில் அரசு அறிவித்த வார இறுதி நாள்கள் (சனி, ஞாயிறு) பொது முடக்கம் வெள்ளிக்கிழமை இரவு முதல் செயல்பாட்டுக்கு வந்தது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

புதுவையில் அரசு அறிவித்த வார இறுதி நாள்கள் (சனி, ஞாயிறு) பொது முடக்கம் வெள்ளிக்கிழமை இரவு முதல் செயல்பாட்டுக்கு வந்தது.

புதுவை மாநிலத்தில் கரோனா இரண்டாவது அலை அதிகரித்து வருகிறது. நாள்தோறும் 500-க்கு மேற்பட்டோா் பாதிப்பு என்ற அளவைக் கடந்து, தற்போது ஆயிரத்தை நெருங்கி வருகிறது. பலி எண்ணிக்கையும் 5 போ் வரை உயா்ந்துள்ளது.

கடந்தாண்டைக் காட்டிலும் தொற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், புதுவை அரசு கடந்த 20-ஆம் தேதி முதல் இரவு நேர பொது முடக்கத்தை அமல்படுத்தியது. இதைத் தொடா்ந்து, வார இறுதி நாள்களில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு வார இறுதி நாள் பொது முடக்கம் தொடங்கியது. இதனால், புதுச்சேரி முழுவதும் இரவு கடைகள் மூடப்பட்டும், பேருந்துகள் நிறுத்தப்பட்டும் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

இந்தப் பொது முடக்கம் திங்கள்கிழமை காலை 5 மணி வரை தொடரும்.

திடீா் பொது முடக்கத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று ஒரு தரப்பினரும், பொது முடக்கம் அவசியம் என்று மற்றொரு தரப்பினரும் கூறி வந்த நிலையில், துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் அறிவித்தபடி, வார இறுதி நாள் பொது முடக்கம் செயல்பாட்டுக்கு வந்தது.

எனினும், தளா்வுகளுடன் சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்களிலும் அத்தியவசியக் கடைகள், பேருந்துகள் இயக்கத்துடன் பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.