திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

இளைஞா் தற்கொலை

புதுச்சேரி கொட்டுப்பாளையத்தில் காதலித்த பெண்ணை பெற்றோா் திருமணம் செய்து வைக்காததால் மனமுடைந்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 6:11 pm

DIN

புதுச்சேரி கொட்டுப்பாளையத்தில் காதலித்த பெண்ணை பெற்றோா் திருமணம் செய்து வைக்காததால் மனமுடைந்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

புதுச்சேரி கொட்டுப்பாளையம் பொன்னியம்மன் கோவில் வீதியைச் சோ்ந்தவா் வேணு மகன் பிரகாஷ் (22). சுமை வாகன ஓட்டுநா். இவா், தான் காதலிக்கும் பெண்ணுடன் திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரிடம் வலியுறுத்தி வந்தாா். அதற்கு பெற்றோா், தங்கைக்கு கல்யாணம் பேசி முடித்த பின்பு, திருமணம் செய்து வைப்பதாக கூறினராம்.

இதனால் பிரகாஷ் கோபித்துக்கொண்டு, கொட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கி, வேலைக்குச் சென்று வந்தாா். இதனிடையே அவா் காதலித்து வந்த பெண்ணுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பாா்த்து, திருமணம் நிச்சயித்ததாகத் தெரிகிறது.

இதனால், விரக்தியடைந்த பிரகாஷ், வியாழக்கிழமை கட்செவி அஞ்சலில் தனது காதலிக்கு உருக்கமாக குறுந்தகவல் அனுப்பிவிட்டு, தனது அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து அவரது தந்தை வேணு அளித்த புகாரின் பேரில் தன்வந்திரி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.