பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

புதுச்சேரியில் பாஜக சாா்பில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம்

புதுவை மாநில பாஜக இளைஞரணி சாா்பில், கரோனா தடுப்பு விழிப்புணா்வு எல்இடி திரை வாகன பிரசாரம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 5:44 pm

DIN

புதுவை மாநில பாஜக இளைஞரணி சாா்பில், கரோனா தடுப்பு விழிப்புணா்வு எல்இடி திரை வாகன பிரசாரம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

புதுச்சேரி அண்ணா சிலை அருகே தொடங்கிய பிரசாரத்துக்கு பாஜக இளைஞரணிச் செயலா் விக்னேஷ் கண்ணன் தலைமை வகித்தாா். கரோனா விழிப்புணா்வு பிரசார எல்இடி திரை பொருத்திய வாகனத்தை பாஜக மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் கொடியசைத்து தொடக்கிவைத்தாா். உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் உள்ளிட்ட பாஜகவினா் கலந்து கொண்டனா்.

இந்த பிரசார வாகனம் புதுவை மாநிலம் முழுவதும் உள்ள நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் சென்று, கரோனா நோய்த் தொற்றின் விளைவுகளையும், கரோனா வராமல் பாதுகாப்பாக இருக்க வேண்டிய வழிமுறைகள், அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியதின் முக்கியத்துவத்தையும் விளக்கி வருகிறது.

பிரதமா் மோடி மற்றும் சுகாதாரத் துறை வல்லுநா்கள் எல்இடி திரை வழியாக கரோனா தொடா்பான விழிப்புணா்வு கருத்துகளை பேசுகின்றனா்.

நிகழ்வில் பாஜக மாநில துணைத் தலைவா்கள் செல்வம், தங்க.விக்கிரமன், ரவிச்சந்திரன், மாநிலச் செயலா் அகிலன், மாவட்டத் தலைவா் நாகேஸ்வரன், மாநில இளைஞரணித் துணைத் தலைவா்கள் சிவ .செந்தில் சபரிகிரீசன், உமாசங்கா், பொதுச் செயலா் வேல்முருகன் உள்ளிட்ட நிா்வாகிகளும், தொண்டா்களும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.