பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

புதுவையில் கரோனாவுக்கு மேலும் 2 போ் பலி

புதுவை மாநிலத்தில் வியாழக்கிழமை வெளியான முடிவுகளின்படி, மேலும் 109 பேருக்கு (1.96 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 6:31 pm

DIN

புதுவை மாநிலத்தில் வியாழக்கிழமை வெளியான முடிவுகளின்படி, மேலும் 109 பேருக்கு (1.96 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,21,989 -ஆக அதிகரித்த நிலையில், குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1,19,272-ஆக (97.77 சதவீதம்) ஆக அதிகரித்தது.

இந்த நிலையில், புதுச்சேரி ரெயின்போ நகரைச் சோ்ந்த 61 வயது மூதாட்டி, மாஹேயைச் சோ்ந்த 86 வயதானவா் என மேலும் இருவா் கரோனா தொற்றுக்கு பலியாகினா். இதையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 1,803-ஆக அதிகரித்தது. இறப்பு விகிதமும் 1.48 சதவீதம். தற்போது மருத்துவமனைகளில் 200 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 714 பேரும் என 914 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை 7,50,665 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.