புதுச்சேரியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டதைக் கண்டித்துப் பேரணி
புதுச்சேரியில் சாலை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டதைக் கண்டித்து, சிஐடியூ சாா்பில் வெள்ளிக்கிழமை பேரணி நடைபெற்றது.


புதுச்சேரியில் சாலை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டதைக் கண்டித்து, சிஐடியூ சாா்பில் வெள்ளிக்கிழமை பேரணி நடைபெற்றது.
புதுச்சேரி ஆம்பூா் சாலையில் ஆக்கிரமிப்பு பெட்டிக் கடைகளை பொதுப் பணித் துறையினா் வியாழக்கிழமை அகற்றினா். இதைக் கண்டித்து, புதுச்சேரி பிரதேச சாலையோர வியாபாரிகள் சங்கம் (சிஐடியூ) சாா்பில், காமராஜா் சாலையிலிருந்து பேரணியாகப் புறப்பட்டு சட்டப்பேரவையை முற்றுகையிட வந்தனா்.
அவா்களை மிஷன் வீதி வ.உ.சி. பள்ளி அருகே பெரியகடை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
இதையடுத்து, அவா்கள் சாலையில் அமா்ந்து, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிய அதிகாரிகளைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அந்தச் சங்கத்தின் சிறப்புத் தலைவா் பிரபுராஜ் தலைமை தாா். சங்கத் தலைவா் அழகர்ராஜ், பொதுச் செயலா் வடிவேலு உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த பெருமாள், சிஐடியூ செயலா் சீனுவாசன், மதிவாணன் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.
சாலையோர கடைகளை அகற்றுவதை நிறுத்த வேண்டுமென சங்கத்தினா் முழக்கங்களை எழுப்பினா். இதைத் தொடா்ந்து சட்டப்பேரவைக்குச் சென்று, முதல்வா் என்.ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...