பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

புதுவை இந்தியாவுடன் இணைக்கப்பட்ட நாள் விழா: கீழூர் நினைவிடத்தில் மரியாதை

புதுவை இந்தியாவுடன் இணைக்கப்பட்டதன் சட்டப்பூர்வ அதிகாரப் பரிமாற்ற நாள் இன்று கொண்டாடப்பட்டது. 

News image
புதுச்சேரி கீழூர் தியாகிகள் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பேரவைத் தலைவர் ஆர் செல்வம், அமைச்சர் தேனி ஜெயக்குமார் உள்ளிட்டோர்.
Updated On :16 ஆகஸ்ட் 2021, 7:23 am

DIN

புதுவை இந்தியாவுடன் இணைக்கப்பட்டதன் சட்டப்பூர்வ அதிகாரப் பரிமாற்ற நாள் இன்று கொண்டாடப்பட்டது. 

பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி, கடந்த 1962-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி இந்தியாவுடன் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது. இந்ததினத்தை சட்டபூர்வ பரிமாற்ற தினமாக புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

Story image

இதன்படி நிகழாண்டு திங்கள்கிழமை சட்டப்பூர்வ பரிமாறி நாள் கொண்டாடப்பட்டது. புதுச்சேரி அருகே கீழூர் தியாகிகள் நினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுவை மாநில வேளாண் அமைச்சர் தேனி C. ஜெயக்குமார் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். 

புதுவை சட்டப்பேரவை தலைவர் ஆர்.செல்வம் கீழூர் நினைவு தூணில் தூவி மரியாதை செலுத்தினார். உடன்,  சட்டமன்ற உறுப்பினர்கள் P.V.ஆறுமுகம், KSP.ரமேஷ் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், தியாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் முடிவில் தியாகிகள் கௌரவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.