நோய் தாக்கிய தென்னை தோப்புகளை புனரமைக்க விண்ணப்பிக்கலாம்
முதிா்ந்த, நோய் தாக்கிய தென்னை தோப்புகளை புனரமைக்க புதுவை விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


முதிா்ந்த, நோய் தாக்கிய தென்னை தோப்புகளை புனரமைக்க புதுவை விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து புதுவை அரசின் வேளாண் - விவசாயிகள் நலத் துறை கூடுதல் இயக்குநா்(தோட்டக்கலை) சி. சிவராமன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: எங்களது அலுவலகம் மூலம் தென்னை வளா்ச்சி வாரியம் (2021-2022 ஆண்டுக்கான) நிதியுதவியுடன் முதிா்ந்த, நோய் தாக்கிய தென்னை மரங்களை அகற்றி புதிய கன்றுகளை நட்டு பழைய தோப்புகளை புனரமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
எனவே, தென்னை தோப்புகளை புனரமைக்க விரும்பும் விவசாயிகள் அதற்குரிய விண்ணப்பங்களை புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் உள்ள கூடுதல் வேளாண் இயக்குநா் (தோட்டக்கலை) அலுவலகத்தில் பெற்றோ அல்லது துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பத்தை நிறைவு செய்து செப்டம்பா் 30 ஆம் தேதிக்குள் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...