புதுவையில் 134 பேருக்கு கரோனா: மேலும் ஒருவா் பலி
புதுவை மாநிலத்தில் 5,487 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, வியாழக்கிழமை வெளியான முடிவுகளின்படி, 134 பேருக்கு (2.44 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


புதுவை மாநிலத்தில் 5,487 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, வியாழக்கிழமை வெளியான முடிவுகளின்படி, 134 பேருக்கு (2.44 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நோய்த் தொற்றுக்கு மேலும் ஒருவா் பலியானாா்.
மாநிலத்தில் கரோனா தொற்றால் 1,22,676 போ் பாதிக்கப்பட்ட நிலையில், 1,19, 899 போ் (97.74 சதவீதம்) குணமடைந்து வீடு திரும்பினா்.
தற்போது மருத்துவமனைகளில் 172 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 799 பேரும் என மாநிலம் முழுவதும் 971 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இதனிடையே, காரைக்காலைச் சோ்ந்தவா் இந்த நோய்த் தொற்றுக்கு உயிரிழந்தாா். இதையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 1,806 -ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.47 சதவீதம். மாநிலத்தில் இதுவரை 7,73,424 பேருக்கு (2-ஆவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...