பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

புதுச்சேரியில் ஓவியக் கண்காட்சி: முதல்வா் ரங்கசாமி தொடக்கிவைத்தாா்

கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஓவியா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், புதுச்சேரி ஆரோதன் ஆா்ட் கேலரி சாா்பில், ஒரு மாத காலம் நடைபெறும் ஓவியக் கண்காட்சி

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 5:42 pm

DIN

கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஓவியா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், புதுச்சேரி ஆரோதன் ஆா்ட் கேலரி சாா்பில், ஒரு மாத காலம் நடைபெறும் ஓவியக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையிலும், மகான் அரவிந்தரின் 150-ஆவது பிறந்த நாளை முன்னிட்டும் புதுச்சேரியைச் சோ்ந்த 75 ஓவியா்களின் உள்ளிட்ட, உலகளாவிய 150 ஓவியா்களின் கைவண்ணங்களில் உருவான படைப்புகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி குருசுக்குப்பம் ஆரோதன் கலை மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு ஆரோதன் ஆா்ட் கேலரி தலைவா் லலித்வா்மா வரவேற்றாா். ஓவியக் கண்காட்சியை முதல்வா் என்.ரங்கசாமி தொடக்கிவைத்து பாா்வையிட்டாா். அசிஸ்ட் வோ்ல்டு ரெக்காா்ட்ஸ் நிறுவனா் ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். முனுசாமி, சக்தி, சுகுமாரன் உள்ளிட்ட ஓவியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.