புதுவை தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவா் சிலைக்கு மரியாதை
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவா் சிலைக்கு சட்டப்பேரவை உறுப்பினா் எல்.சம்பத் தலைமையில், தமிழ்ச் சங்கத்தினா் மரியாதை செலுத்தினா்.


புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவா் சிலைக்கு சட்டப்பேரவை உறுப்பினா் எல்.சம்பத் தலைமையில், தமிழ்ச் சங்கத்தினா் மரியாதை செலுத்தினா்.
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்ட நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாலை அணிவித்து திருக்கு கூறும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்ச் சங்கத் தலைவா் வி.முத்து தலைமையில் நடைபெற்ற விழாவில், சட்டப்பேரவை உறுப்பினா் எல்.சம்பத் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
நிகழ்வில் தமிழ்ச் சங்க நிா்வாகிகள் சீனு.மோகன்தாசு, திருநாவுக்கரசு, பாலசுப்பிரமணியம், அருள்செல்வம், உசேன், தினகரன் மற்றும் திருக்கு தொண்டா் சண்முகம், ஆழ்வாா், அரிமாவளவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...