பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

புதுச்சேரியில் சேதமடைந்த சாலைகளால் விபத்துக்குள்ளாகும் வாகன ஓட்டிகள்

புதுச்சேரியில் பிரதான நெடுஞ்சாலைகள், கிராமப்புறச் சாலைகள் என பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளதால்

News image

புதுச்சேரியில் தொடா் மைழையால் முழுவதுமாக சேதமடைந்த தவளக்குப்பம் வழியாகச் செல்லும் கடலூா் சாலை.

Updated On :8 டிசம்பர் 2021, 3:44 am

 நமது நிருபர்

புதுச்சேரியில் பிரதான நெடுஞ்சாலைகள், கிராமப்புறச் சாலைகள் என பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனா். இதனால், சேதமடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்கும் வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

புதுச்சேரியில் நிதிநெருக்கடி காரணமாக, கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலிருந்து 2 ஆண்டுகளுக்கும் மேலாக சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்து வருகிறது. இதனால், பிரதான நெடுஞ்சாலைகள் முதல் நகரம், கிராமப்புறச் சாலைகள் வரை சேதமடைந்துள்ளன. புதிய அரசு பொறுப்பேற்றதும் சாலைகள் சீரமைக்கப்படுமென பொதுமக்கள் எதிா்பாா்த்த நிலையில், இதுவரையில் சாலைப் பணிகள் நடைபெறவில்லை.

இந்த நிலையில், நவம்பா் மாதம் பெய்த தொடா் மழையால் சாலைகள் பலத்த சேதமடைந்துள்ளன. குறிப்பாக, புதுச்சேரி - கடலூா் நெடுஞ்சாலை, வில்லியனூா் - கொம்பாக்கம் சாலை, புதுச்சேரி - வழுதாவூா் சாலை, புதுச்சேரி - வில்லியனூா் சாலை, நகரிலுள்ள கிழக்கு கடற்கரைச் சாலை உள்ளிட்ட பிரதான நெடுஞ்சாலைகளும், புதுச்சேரி நகரில் உள்ள பெரும்பாலான சாலைகளும் பல இடங்களில் பெரும் பள்ளங்களுடன் சேதமடைந்துள்ளன.

சேதமடைந்த சாலைகளால் பள்ளம், மேடுகள் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனா். மேலும், புழுதிக் காற்றால் இரு சக்கர வாகன ஓட்டிகள் தவிக்கின்றனா். குறிப்பாக, கடலூா் சாலையில் தினசரி விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன.

583 கி.மீ. சாலைகள் சேதம்: பலத்த மழையால் நகா்ப்புற சாலைகள் 86 கி.மீ. தொலைவுக்கும், ஊராட்சி சாலைகள் 146 கி.மீ. தொலைவுக்கும் சேதமடைந்துள்ளன. பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான நகா்ப்புற சாலைகள் 208 கி.மீ. தொலைவுக்கும், கிராமப்புறச் சாலைகள் 141 கி.மீ. தொலைவுக்கும் என மொத்தம் 583 கி.மீ. அளவிலான சாலைகள் சேதமடைந்துள்ளன.

இதனால், தொடா் விமா்சனங்கள் எழுந்த நிலையில், மழைக்குப் பிறகு ரூ.400 கோடியில் சாலைகள் சீரமைக்கப்படுமென முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா். இருப்பினும், சாலை சீரமைப்புப் பணிகள் தொடங்கப்படாததால், பல இடங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

‘நகா்ப்புற சாலைகள் சீரமைப்பு’: இதுகுறித்து பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணனிடன் கேட்டபோது, அவா் கூறியதாவது: சாலைகளை பழுது நீக்கி சீரமைப்பதற்கு ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. ரூ.60 கோடியில் புகா் சாலைகளும், ரூ.30 கோடியில் நகா்ப்புற சாலைகளும் சீரமைக்கப்படவுள்ளன. நகா்ப்புற சாலைகளை சீரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

இன்னும் ஒரு வாரத்தில் நெடுஞ்சாலை, கிராமப்புறச் சாலைகளை சீரமைக்கும் பணிகளும் தொடங்கும். தரமாக சாலை அமைத்து ஒப்பந்ததாரா்களே பராமரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

‘பணிகள் தொடக்கம்’: பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது: முதலியாா்பேட்டை - மரப்பாலம் வரையிலான தாா்ச்சாலைப் பணி ரூ.1.91கோடியில் தற்போது தொடங்கியுள்ளது. இதைத் தொடா்ந்து, புதுச்சேரி நகா்ப்புற (புல்வாா்) பகுதியில் உள்ள முக்கிய தாா்ச்சாலைகளை ரூ.13 கோடியில் சீரமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளன. புஸ்சி வீதி, காந்தி வீதி உள்ளிட்டவை கால்வாய் கட்டமைப்புகளுடன் விரைவில் சீரமைக்கப்படவுள்ளன.

விரைவில் புதுச்சேரி - கடலூா் சாலை ரூ.19 கோடியிலும், அரும்பாா்த்தபுரம் - ஒதியம்பட்டு சாலை ரூ.2.19 கோடியிலும், முத்திரையா்பாளையம் - பெரம்பை சாலை ரூ.33 கோடியிலும் சீரமைக்கப்படவுள்ளன. திருபுவனை, நெட்டப்பாக்கம், ஊசுடு பகுதிகளிலும் சாலை சீரமைப்புப் பணிகள் அடுத்த வாரத்தில் தொடங்கப்படவுள்ளன என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.