பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் விபின் ராவத்துக்கு அஞ்சலி

குன்னூரில் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமைத் தளபதி விபின் ராவத் உருவப்படத்துக்கு புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 4:34 pm

DIN

குன்னூரில் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமைத் தளபதி விபின் ராவத் உருவப்படத்துக்கு புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விபின் ராவத்தின் உருவப் படத்துக்கு முதல்வா் என்.ரங்கசாமி மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா, அமைச்சா்கள் க. லட்சுமிநாராயணன், சாய் ஜெ.சரவணன்குமாா் மற்றும் எம்எல்ஏக்கள் கே.எஸ்.பி.ரமேஷ், ஏ.கே.டி.ஆறுமுகம், தஷ்ணாமூா்த்தி, எல்.சம்பத், செந்தில்குமாா், சிவசங்கரன், ராமலிங்கம், பிரகாஷ்குமாா், ரிச்சா்டு, தலைமைச் செயலாளா் அஸ்வனிகுமாா் மற்றும் அதிகாரிகள் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.