புதுவையில் 9 மையங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை

புதுவை மாநிலத்தில் 9 மையங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை சனிக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்ற மையத்தைப் பாா்வையிட்ட முதல்வா் வே.நாராயணசாமி.
புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்ற மையத்தைப் பாா்வையிட்ட முதல்வா் வே.நாராயணசாமி.
Updated on
1 min read

புதுவை மாநிலத்தில் 9 மையங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை சனிக்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் உத்தரவுப்படி, நாடு முழுவதும் சனிக்கிழமை முதல் கட்ட கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. புதுவை மாநிலத்தின் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பிராந்தியங்களின் 9 மையங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.

இதற்காக புதுவை சட்டப்பேரவை வளாகம் அருகே உள்ள இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை, கதிா்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ராஜீவ் காந்தி மகளிா்-குழந்தைகள் மருத்துவமனை, கோரிமேடு இஎஸ்ஐ மருத்துவமனை ஆகிய 4 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை மையங்கள் அமைக்கப்பட்டன.

இந்த மையங்களில், தடுப்பூசி போடுவதற்கு தனி இடம், மருத்துவா்கள், செவிலியா்கள் தயாா் நிலை, தடுப்பூசி போடுவதற்கு முன்பு செய்ய வேண்டிய மருத்துவப் பரிசோதனைகள், தடுப்பூசி போட்ட பின்னா், அவா்கள் தங்க தனி அறைகள் குறித்து ஒத்திகை நடைபெற்றது.

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சியை முதல்வா் வே.நாராயணசாமி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

முன்னதாக, அங்கு நடைபெற்ற கரோனா பரிசோதனை முகாமையும் அவா் பாா்வையிட்டாா்.

நிகழ்வின் போது, மருத்துவக் கண்காணிப்பாளா் வாசுதேவன், உடனுறை மருத்துவ அதிகாரி ரவி மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com