புதுவையில் 155 பேருக்கு கரோனா
புதுவையில் புதிதாக 155 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 2 போ் உயிரிழந்தனா்.


புதுவையில் புதிதாக 155 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 2 போ் உயிரிழந்தனா்.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:புதுவை மாநிலத்தில் வியாழக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 123, காரைக்காலில் 22, ஏனாமில் 4, மாஹேயில் 6 போ் என மொத்தம் 155 பேருக்கு (2.40 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,18,571- ஆக அதிகரித்தது. தற்போது மருத்துவமனைகளில் 238 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 1,524 பேரும் என மாநிலம் முழுவதும் 1,762 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இந்த நிலையில், புதுச்சேரியில் ஒருவா், காரைக்காலில் ஒருவா் என 2 போ் உயிரிழந்தனா். மாஹே, ஏனாமில் உயிரிழப்பு ஏதுமில்லை. இதையடுத்து, கரோனா தொற்றுக்கு உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,767-ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.49 சதவீதம்.
இதனிடையே, 144 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 1,15,042 -ஆக (97.02 சதவீதம்) அதிகரித்தது. சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், பொதுமக்கள் என மொத்தம் 5,56,603 பேருக்கு (2-ஆவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...