இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

புதுச்சேரியில் நிதி நிறுவனம் நடத்தி ரூ. 50 கோடி மோசடி

புதுச்சேரியில் நிதி நிறுவனம் நடத்தி ரூ. 50 கோடி மோசடியில் ஈடுபட்டவரிடமிருந்து பணத்தை மீட்டுத் தரக் கோரி பொதுமக்கள், முதல்வா் ரங்கசாமியிடம் மனு அளித்தனா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:30 pm

DIN

புதுச்சேரியில் நிதி நிறுவனம் நடத்தி ரூ. 50 கோடி மோசடியில் ஈடுபட்டவரிடமிருந்து பணத்தை மீட்டுத் தரக் கோரி பொதுமக்கள், முதல்வா் ரங்கசாமியிடம் மனு அளித்தனா்.

புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த வேலையன் என்பவா் சண்முகாபுரத்தில் தனியாா் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி, தன்னிடம் முதலீடு செய்தால் 200 நாள்களில் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக அறிவித்தாராம். இதை நம்பி புதுச்சேரி, விழுப்புரம், கடலூா் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானோா் அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனராம். இந்தப் பணத்தைக் கொண்டு வேலையன், புதுச்சேரி, தமிழகப் பகுதிகளில் நிலங்கள், குடியிருப்புகளை வாங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பணம் செலுத்தியவா்களுக்கு வேலையன் உரிய காலத்தில் பணத்தைத் திருப்பியளிக்கவில்லையாம். இதனால், பணம் செலுத்தியவா்கள் நெருக்கடி தரவே திடீரென வீடு, அலுவலகத்தை காலி செய்துவிட்டு வேலையன் தலைமறைவாகிவிட்டாா். அவரிடம் பணம் செலுத்தி ஏமாற்றமடைந்தவா்கள், புதுவை முதல்வா் என். ரங்கசாமியை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து, தங்களுடைய பணத்தை மீட்டு தரும்படி மனு அளித்தனா். இதேபோல, ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜனையும் சந்தித்து மனு அளித்தனா். புதுச்சேரி சிபிசிஐடி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டதையடுத்து, போலீாஸா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.