பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மாட்டு வண்டி ஓட்டிச் சென்று புதுவை முன்னாள் முதல்வர் போராட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காரைக்காலில் புதுவை முன்னாள் முதல்வர் வி.நாராயணசாமி மாட்டு ஓட்டிச் சென்று திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டார்.


பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காரைக்காலில் புதுவை முன்னாள் முதல்வர் வி.நாராயணசாமி மாட்டு ஓட்டிச் சென்று திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டார்.
புதுவை காங்கிரஸ் சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயர்வைக் கண்டித்து தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. காரைக்காலில் திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டத்துக்கு புதுவை முன்னாள் முதல்வர் வி.நாராயணசாமி கலந்துகொண்டார். தேர்தலுக்குப் பின் முதல் முறையாக காரைக்கால் வந்த அவரை பூவம் எல்லையில் மாவட்டத் தலைவர் ஆர்.பி.சந்திரமோகன் தலைமையில் கட்சியினர் வரவேற்றனர்.
காரைக்கால் தலத்தெரு பகுதியிலிருந்து வி.நாராயணசாமி மாட்டு வண்டியை நகரப் பகுதி நோக்கி ஓட்டி வந்து போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தின் நிறைவில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆலோசனையின்பேரில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கட்சியின் அனைத்து நிலையினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் 130 டாலராக இருந்தபோது, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.65-க்கும், டீசல் ரூ.53-க்கும், எரிவாயு உருளை ரூ.350-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மத்தியில் நரேந்திரமோடி ஆட்சியிலிருக்கும்போது கச்சா எண்ணெய் விலை பேரல் 70 டாலராக இருக்கும் நிலையில், பெட்ரோல் லிட்டர் ரூ.101-க்கும், டீசல் லிட்டர் ரூ.94-க்கும், எரிவாயு உருளை ரூ.850-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதன் மூலம் மத்திய அரசு ரூ.4 லட்சம் கோடி வருவாய் ஈட்டுகிறது. இந்தியாவிலிருந்துதான் நேபாளத்துக்கு பெட்ரோல் அனுப்பப்படுகிறது.
அங்கு லிட்டர் ரூ.70-க்கும் விற்கும்போது, இந்தியாவில் மட்டும் உச்சபட்ச விலை விற்பதால் அனைத்து தரப்பினரும் பாதித்துள்ளனர். இதனால் காய்கனி, மளிகை, வாகனங்கள் உள்ளிட்ட பல பொருள்களி விலையேறிவிட்டது.
மோடி அரசு மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. கரோனா தொற்றுப் பரவலால் வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்பட்டிருக்கும் நிலையில், மத்திய அரசின் அலட்சியப்போக்கு மக்களை பெருமளவு பாதிக்கச் செய்துள்ளது. உடனடியாக எரிபொருள் விலையை காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் விற்பனை செய்ததுபோல குறைக்காவிட்டால், நரேந்திரமோடி பதவி விலக வலியுறுத்தும் கோஷத்தை முன்வைத்து காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபடும் என்றார்.
போராட்டத்தில் புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிலையிலான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...