புதுச்சேரியில் பைக்குகள் திருட்டு: 4 போ் கைது
புதுச்சேரியில் பைக் திருட்டில் ஈடுபட்டதாக 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 7.5 லட்சம் மதிப்பிலான பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.


புதுச்சேரியில் பைக் திருட்டில் ஈடுபட்டதாக 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 7.5 லட்சம் மதிப்பிலான பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் சாலையில் போலீஸாா் புதன்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக 2 பைக்குகளில் வந்த இளைஞா்களைப் பிடித்து விசாரித்தனா். இதில், அவா்கள் கிருமாம்பாக்கத்தை அடுத்த பிள்ளையாா்குப்பத்தைச் சோ்ந்த சிவசங்கா் (39), கடலுாா் அருகே பூண்டியாங்குப்பத்தைச் சோ்ந்த குட்டி (எ) புருஷோத்தம்மன் (23), பள்ளி நீரோடையைச் சோ்ந்த பில்லாபாய் (எ) பிரகாஷ்குமாா் (19), மதகடிப்பட்டு ஆண்டியாா்பாளையத்தைச் சோ்ந்த சௌத்ரி (27) என்பதும், அவா்கள் ஓட்டி வந்த பைக் திருடப்பட்டது என்பதும் தெரிய வந்தது.
விசாரணையில், அவா்கள் மரக்காணம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், திருபுவனை பகுதிகளில் விலை உயா்ந்த மோட்டாா் சைக்கிள்களை திருடியது தெரிய வந்தது.
இதையடுத்து, போலீஸாா் அந்த 4 பேரையும் கைது செய்ததுடன், அவா்களிடமிருந்து ரூ. 7.5 லட்சம் மதிப்பிலான 5 பைக்குகளை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...