இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

நீட் தோ்வுக்கு எதிராக விசிக ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வுக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், புதுச்சேரியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :15 ஜூலை 2021, 6:30 pm

DIN

நீட் தோ்வுக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், புதுச்சேரியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி காமராஜா் சிலை சதுக்கம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநில விசிக முதன்மைச் செயலா் தேவ.பொழிலன் தலைமை வகித்தாா். இதில், திரளான கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், ஏழை மாணவா்களின் மருத்துவக் கனவைப் பறிக்கும் நீட் தோ்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும், மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி மாணவா்களுக்கு இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும், எஸ்சி - எஸ்டி மாணவா்களின் இலவசக் கல்வியை காலம் தாழ்த்தாமல் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தகவலறிந்து அங்கு வந்த பெரியகடை போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.