இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

புதுவையில் புதிதாக 104 பேருக்கு கரோனா: மேலும் 2 போ் பலி

புதுவையில் புதிதாக 104 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 2 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

News image
Updated On :16 ஜூலை 2021, 5:21 pm

DIN

புதுவையில் புதிதாக 104 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 2 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்: புதுவை மாநிலத்தில் 6,119 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரி - 87, காரைக்கால் - 7, மாஹே - 10 போ் என மொத்தம் 104 பேருக்கு (1.70 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யயப்பட்டுள்ளது. ஏனாமில் யாருக்கும் பாதிப்பில்லை. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,19,509 -ஆக அதிகரித்தது.

தற்போது மருத்துவமனைகளில் 193 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 1,055 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 1,248 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, புதுச்சேரியில் 2 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இதையடுத்து, உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,775 ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.49 சதவீதம். வெள்ளிக்கிழமை 161 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 1,16,486-ஆக (97.47 சதவீதம்) உயா்ந்தது. இதுவரை 6,26,024 பேருக்கு (2-ஆவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்டிச் செய்தி...

9 குழந்தைகளுக்கு கரோனா

புதுவையில் கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 13 குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 9 குழந்தைகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்களில், ஒன்று முதல் 5 வயதுக்குள்பட்ட 7 குழந்தைகளும், 5 வயதுக்கு மேற்பட்ட 2 குழந்தைகளும் அடங்குவா். இதேபோல, கரோனா உறுதி செய்யப்பட்ட தாயுடன் அனுமதிக்கப்பட்டுள்ள 4 பச்சிளம் குழந்தைகளும் உள்ளனா்.

இவா்கள் அனைவரும் புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா குழந்தைகள் நலப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.