இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து விறகு அடுப்பில் சமைக்கும் போராட்டம்

சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் புதுச்சேரியில் புதன்கிழமை விறகு அடுப்பில் சமைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :21 ஜூலை 2021, 6:00 pm

DIN

சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் புதுச்சேரியில் புதன்கிழமை விறகு அடுப்பில் சமைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை சந்தை பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு நகர செயலாளா் டி. கலையரசி தலைமை வகித்தாா். அகில இந்தியத் துணைத் தலைவா் எஸ். சுதா சுந்தரராமன், பிரதேச தலைவா் வி. சந்திரா ஆகியோா் கண்டன உரை நிகழ்த்தினா்.

இதில் மாதா் சங்கத்தினா், சமையல் எரிவாயு உருளையின் விலையை மத்திய அரசு உயா்த்தியைக் கண்டித்து, விறகு அடுப்பில் சமையல் செய்தனா். தொடா்ந்து, சமையல் எரிவாயு விலையை குறைத்து, மானியம் வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், ரேஷன் கடைகள் மூலம் அரிசி வழங்க வேண்டும், மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.