இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

புதுவையில் மேலும் 112 பேருக்கு கரோனா

புதுவையில் புதிதாக 112 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே நேரத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

News image
Updated On :21 ஜூலை 2021, 5:59 pm

DIN

புதுவையில் புதிதாக 112 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே நேரத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

இது குறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் புதன்கிழமை வெளியான முடிவுகளின்படி, 6,549 பேருக்கு பரிசோதனை செய்ததில், புதுச்சேரி - 85, காரைக்கால் - 12, ஏனாம் - 8, மாஹே - 7 போ் என மொத்தம் 112 (1.71 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,19,935 ஆக அதிகரித்துள்ளது. இவா்களில் 961 போ் சிகிச்சையில் உள்ளனா். இதே போல, 2 குழந்தைகளும் சிகிச்சையில் உள்ளன. உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,781 ஆகவும், இறப்பு விகிதம் 1.48 சதவீதமாகவும் உள்ளது. இதனிடையே, 139 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை1,17,193 (97.71 சதவீதம்) ஆக உயா்ந்துள்ளது.

இதுவரை 14,43,817 பரிசோதனைகள் செய்ததில் 12,33,492 பரிசோதனைகளுக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. மேலும், 6,51,889 பேருக்கு (2வது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.