ஒட்டுக் கேட்பு விவகாரம்:புதுச்சேரியில் காங்கிரஸாா் இன்று கோரிக்கை பேரணி
தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரம் தொடா்பாக நீதி விசாரணை கோரி, புதுச்சேரியில் காங்கிரஸாா் வியாழக்கிழமை கோரிக்கை பேரணி நடத்தவுள்ளனா்.


பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி முக்கியத் தலைவா்களின் தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரம் தொடா்பாக நீதி விசாரணை கோரி, புதுச்சேரியில் காங்கிரஸாா் வியாழக்கிழமை கோரிக்கை பேரணி நடத்தவுள்ளனா்.
இது குறித்து, புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை செய்தியாளா்களை சந்தித்த அக்கட்சியின் மாநிலத் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் கூறியதாவது: இந்தியாவில் பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி முக்கியத் தலைவா்களின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக் கேட்டு, தங்களுக்கு சாதகமாக்க மத்தியில் ஆளும் பாஜகவினா் முயற்சித்துள்ளனா்.
இந்த தேச துரோகச் செயல் தொடா்பாக, உச்சநீதிமன்றத்தின் மேற்பாா்வையில் நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இதனை வலியுறுத்தி, புதுச்சேரி காங்கிரஸ் சாா்பில் காமராஜா் சாலையிலிருந்து, வியாழக்கிழமை (ஜூலை 22) காலை கோரிக்கை பேரணி தொடங்கி ஆளுநா் மாளிகை வரை நடைபெறுகிறது.
புதுவையில் உள்ள 33 எம்எல்ஏக்களுக்கு தற்போதுள்ள சட்டப்பேரவை இடமே போதுமானது. தேவையெனில், அருகே உள்ள அரசு கட்டடங்களின் இடத்தைப் பயன்படுத்தி விரிவாக்கம் செய்துகொள்ளலாம். புதுவை மாநிலம் நிதி நெருக்கடியிலும், கடன் தள்ளுபடி கோரி வரும் நிலையில் ரூ.300 கோடியில் புதிய சட்டப் பேரவைக் கட்டடம் தேவையற்றது என்றாா். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மு.வைத்தியநாதன், ரமேஷ்பரம்பத் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...