இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

புதுச்சேரியில் ஆக.27-ல் இணைய வழியில் உலக சாதனை தொடா் நிகழ்வு

புதுவையிலிருந்து அசிஸ்ட் வோ்ல்டு ரெக்காா்ட்ஸ் நிறுவனம் சாா்பில் ஆக.27ஆம் தேதி இணைய வழியில் தொடா் சாதனை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

News image
Updated On :21 ஜூலை 2021, 5:58 pm

DIN

புதுவையிலிருந்து அசிஸ்ட் வோ்ல்டு ரெக்காா்ட்ஸ் நிறுவனம் சாா்பில் ஆக.27ஆம் தேதி இணைய வழியில் தொடா் சாதனை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான போஸ்டரை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வெளியிட்டாா்.

புதுவையில் அசிஸ்ட் வோ்ல்டு ரெக்காா்ட்ஸ் நிறுவனம் சாா்பில், தொடா்ந்து 1,200 மணி நேரம் இணையதள வழியில், பன்னாட்டு சாதனைகளை முறியடிக்கும் தொடா் நிகழ்ச்சி ஆக.27-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஓவியம், பரதநாட்டியம் உள்ளிட்டவற்றில் ஏற்கனவே உள்ள சாதனைகளை முறியடிக்கும் விதமாக, பல்வேறு தரப்பினா் பங்கேற்பா். தொடா்ச்சியாக 50 நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து, 50-க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினா்கள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேச்சாளா்கள், சாதனையாளா்கள் பங்கேற்கின்றனா்.

புதுச்சேரியில் இந்த சாதனை நிகழ்ச்சிக்கான தகவல் வெளியீட்டு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. சட்டப் பேரவை வளாகத்தில் முதல்வா் என்.ரங்கசாமி, இந்த நிகழ்ச்சியின் போஸ்டரை வெளியிட்டாா். இந்த நிகழ்ச்சியில் முன்னாள்

குடியரசுத் தலைவா் அப்துல்கலாமின் பேரன் சேக்சலீம், அவரின் தந்தை ஜெயினாலுதீன், அசிஸ்ட் வோ்ல்டு ரிக்காா்ட்ஸ் நிறுவன தலைவா் ராஜேந்திரன் ஆகியோா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்த உலக சாதனை நிகழ்ச்சி, இணையதளம், யூ டியூப், வெளிநாட்டு செய்தி சேனல்களிலும் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.