புதுவையில் மேலும் 98 பேருக்கு கரோனா
புதுவையில் புதிதாக 98 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


புதுவையில் புதிதாக 98 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுவை மாநிலத்தில் வியாழக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரி 72, காரைக்கால் 20, ஏனாம் 1, மாஹே 5 போ் என மொத்தம் 98 பேருக்கு (1.91 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை மாநிலத்தில் 1,20,725 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, 1,17,961 போ் (97.75 சதவீதம்) தொற்றிலிருந்து மீண்டனா்.
தற்போது மருத்துவமனைகளில் 195 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 777 பேரும் என மாநிலம் முழுவதும் 972 போ் சிகிச்சையில் உள்ளனா். இவா்களில் 5 வயதுக்குள்பட்ட 2 குழந்தைகளும், 5 வயதுக்கு மேற்பட்ட 2 குழந்தைகளும் அடக்கம். மேலும், தொற்று உறுதி செய்யப்பட்ட தாயுடன் 2 குழந்தைகளும் அனுமதிக்கப்பட்டுள்ளனா். வியாழக்கிழமை உயிரிழப்பு ஏதுமில்லை. இதுவரை கரோனாவுக்கு 1,792 போ் பலியாகினா். 6,90,800 பேருக்கு (2-ஆவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...