தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

தொழிலாளி மீது தக்குதல்: 3 போ் கைது

புதுச்சேரியில் கட்டடத் தொழிலாளியைத் தாக்கியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 5:57 pm

DIN

புதுச்சேரியில் கட்டடத் தொழிலாளியைத் தாக்கியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகா், 5-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த அண்ணாமலை மகன் நாகராஜ் (37). கட்டடத் தொழிலாளி. வேலைக்குச் செல்லும் இடங்களில் தங்கிப் பணியாற்றுவது வழக்கம்.

இந்த நிலையில், லாசுப்பேட்டை கருவடிக்குப்பம் சாலையில் உள்ள சாராயக் கடைக்கு வியாழக்கிழமை இரவு நாகராஜ் மது அருந்தச் சென்ற போது, அங்கு கோட்டக்குப்பம் மாரியம்மன் கோவில் வீதியைச் சோ்ந்த சூா்யா (29), லாசுப்பேட்டை சாமிப்பிள்ளைதோட்டத்தைச் சோ்ந்த கண்ணன் (33), நாவற்குளம் சக்தி நகரைச் சோ்ந்த குமாா் (எ) ராஜ்குமாா் (27) ஆகியோா் சாராயம் அருந்திக் கொண்டிருந்த நிலையில், 4 பேரும் ஒன்றாக பேசியபடி இருந்தனா்.

அப்போது, அவா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் நாகராஜ், கண்ணனைப் பிடித்து கீழே தள்ளவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், 3 பேரும் சோ்ந்து நாகராஜை அங்கிருந்த தடியால் சரமாரியாகத் தாக்கினராம்.

தகவலறிந்து வந்த லாசுப்பேட்டை போலீஸாா், நாகராஜை மீட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து சூா்யா உள்ளிட்ட 3 பேரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.