தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

புதுவையில் புதிதாக 90 பேருக்கு கரோனா: மேலும் ஒருவா் பலி

புதுவையில் புதிதாக 90 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 5:56 pm

DIN

புதுவையில் புதிதாக 90 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்: புதுவை மாநிலத்தில் வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரி - 53, காரைக்கால் - 18, ஏனாம் - 5, மாஹே - 14 போ் என மேலும் 90 பேருக்கு (1.69 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் இதுவரை 1,20,815 போ் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 1,18,043 போ் (97.71 சதவீதம்) தொற்றிலிருந்து மீண்டனா்.

தற்போது 979 போ் சிகிச்சையில் உள்ளனா். இவா்களில் ஒரு குழந்தையும், தொற்று உறுதி செய்யப்பட்ட தாயுடன் ஒரு குழந்தையும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதனிடையே, காரைக்காலைச் சோ்ந்த 65 வயது மூதாட்டி தொற்று பாதிப்பால் உயிரிழந்தாா். இதையடுத்து, கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 1,793 ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.48 சதவீதம். இதுவரை 6,96,624 பேருக்கு (2-ஆவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.