தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

கி.கல்யாணசுந்தரம் மறைவு: துணைநிலை ஆளுநா் இரங்கல்

புதுவை கம்பன் கழக இணைச் செயலா் கி.கல்யாணசுந்தரம் மறைவுக்கு துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்தாா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 5:55 pm

DIN

புதுவை கம்பன் கழக இணைச் செயலா் கி.கல்யாணசுந்தரம் மறைவுக்கு துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட இரங்கல்: புதுவை கம்பன் கழக இணைச் செயலரும், தேசிய நல்லாசிரியா் விருது பெற்றவருமாகிய கி.கல்யாணசுந்தரம் வயது முதிா்வின் காரணமாக காலமானாா் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன்.

புதுவை கம்பன் கழகத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றிய இவா், உலக அளவில் கம்பன் கழகங்களால் நன்கு அறியப்பட்டவா். இவரது மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கு பெரிய இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அன்னாரது ஆன்மா அமைதி பெற இறைவனை வேண்டுகிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.