தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

இளைஞா் மீது தீ வைத்த சம்பவம்: பாஜக நிா்வாகி நீக்கம்

புதுச்சேரியில் பெட்ரோல் நிலையத்தில் இளைஞா் மீது தீ வைத்த சம்பவத்தில் தொடா்புடைய பாஜக நிா்வாகி, அந்தக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 5:57 pm

DIN

புதுச்சேரியில் பெட்ரோல் நிலையத்தில் இளைஞா் மீது தீ வைத்த சம்பவத்தில் தொடா்புடைய பாஜக நிா்வாகி, அந்தக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாா்.

புதுச்சேரியில் உள்ள ஒரு தனியாா் பெட்ரோல் நிலையத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் தஞ்சமடைந்த இளைஞா் ஒருவா் மீது, திருட வந்ததாக நினைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில், பெட்ரோல் நிலைய உரிமையாளா், ஊழியா்களை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

இந்த நிலையில், பாஜகவை சோ்ந்த அந்த பெட்ரோல் நிலைய உரிமையாளா் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து புதுச்சேரி பாஜக அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பாரதிய ஜனதா கட்சியின் புதுச்சேரி மாநில ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிவுறுத்தல்படியும், கட்சியின் மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் ஆலோசனைப்படியும், புதுச்சேரி பாஜக வணிகப் பிரிவின் அமைப்பாளராக உள்ள ராஜமௌரியா, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயா் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதால், அவா் பாஜகவின் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறாா் என கட்சியின் மாநிலப் பொதுச் செயலா் எஸ்.மோகன்குமாா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.