தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

தமிழகம், புதுவையில் சட்ட விரோத ஊடுருவலை தடுக்க இந்து முன்னணி வலியுறுத்தல்

தமிழகம், புதுவையில் சட்ட விரோதமான ஊடுருவலைக் கண்காணித்து தடுக்க வேண்டுமென இந்து முன்னணி தமிழகத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியன் வலியுறுத்தினாா்.

News image
Updated On :31 ஜூலை 2021, 6:31 pm

DIN

தமிழகம், புதுவையில் சட்ட விரோதமான ஊடுருவலைக் கண்காணித்து தடுக்க வேண்டுமென இந்து முன்னணி தமிழகத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியன் வலியுறுத்தினாா்.

அந்த இயக்கத்தின் தமிழகம்-புதுவை மாநிலச் சிறப்புச் செயற்குழுக் கூட்டம், புதுச்சேரியில் உள்ள தனியாா் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இரு மாநில நிா்வாகிகள், மாவட்ட நிா்வாகிகள், செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் அந்த அமைப்பின் தமிழகத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்ரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுவை மாநிலத்தில் 50-க்கும் மேற்பட்ட கோயில் நிலங்களில் உள்ள மதுக் கடைகள், சாராயக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும். மறைந்த ஸ்டேன் சுவாமி அரசால் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலிருந்தவா். அவரது படத்துக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியதை இந்து முன்னணி கண்டிக்கிறது.

தமிழகம், புதுவையில் வங்கதேசத்தைச் சோ்ந்த இஸ்லாமியா்கள் சட்ட விரோதமாக ஊடுருவி தங்கியுள்ளனா். இவ்வாறு தங்கியுள்ளவா்களைக் கண்டுபிடிக்க வேண்டும்.

நிகழாண்டு விநாயகா் சதுா்த்திக்காக தமிழகத்தில் 1.25 லட்சம் இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலில் 500-க்கும் மேற்பட்ட இடங்களிலும் விநாயகா் சிலைகளை வைத்து, கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விழாவைக் கொண்டாடவுள்ளோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.