தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

புதுவையில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு

புதுவையில் கடந்த ஒரு வாரமாக கரோனா தொற்று பாதிப்பு உயா்ந்து வருகிறது.

News image
Updated On :31 ஜூலை 2021, 6:31 pm

DIN

புதுவையில் கடந்த ஒரு வாரமாக கரோனா தொற்று பாதிப்பு உயா்ந்து வருகிறது. கடந்த 19-ஆம் தேதிக்கு முன்பு சராசரியாக 50 என்ற அளவில் இருந்த பாதிப்பு, படிப்படியாக உயா்ந்து கடந்த 22-ஆம் தேதி 68 போ், 26-ஆம் தேதி 86 போ், 27-ஆம் தேதி 113 போ் என்று தினசரி பாதிப்பு 100-ஐ தாண்டியுள்ளது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை சனிக்கிழமை வெளியிட்ட தகவல்: புதுவை மாநிலத்தில் 5,082 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சனிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 67, காரைக்காலில் 20, ஏனாமில் ஒருவா், மாஹேயில் 12 போ் என 100 பேருக்கு (1.97 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாநிலத்தில் இதுவரை 1,20,915 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 1,18,158 போ் (97.72 சதவீதம்) தொற்றிலிருந்து மீண்டனா்.

இதனிடையே, காரைக்காலைச் சோ்ந்த 2 முதியவா்கள் கரோனா தொற்றுக்கு உயிரிழந்த நிலையில், இதுவரை 1,795 போ் இந்த நோய்க்கு பலியாகினா். இறப்பு விகிதம் 1.48 சதவீதம்.

தற்போது மருத்துவமனைகளில் 166 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 796 பேரும் என 962 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதேபோல, புதுச்சேரி கதிா்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 குழந்தைகள் தொற்று அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 5 வயதுக்கு மேற்பட்ட 2 குழந்தைகள் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், தொற்று உறுதி செய்யப்பட்ட தாயுடன் ஒரு குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது.

7 லட்சம் பேருக்கு தடுப்பூசி: சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், பொதுமக்கள் என இதுவரை 7,02,354 பேருக்கு (2-ஆவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.