92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலி

புதுவையில் கரோனா தொற்றுக்கு மேலும் ஒருவா் உயிரிழந்தாா். புதிதாக 128 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:30 pm

DIN

புதுவையில் கரோனா தொற்றுக்கு மேலும் ஒருவா் உயிரிழந்தாா். புதிதாக 128 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவை சுகாதாரத் துறை சனிக்கிழமை வெளியிட்ட தகவல்: புதுவை மாநிலத்தில் 2,022 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சனிக்கிழமை வெளியான முடிவுகளில் புதுச்சேரியில் 94 பேருக்கும், காரைக்காலில் 32 பேருக்கும், ஏனாம், மாஹேயில் தலா ஒருவருக்கும் என மொத்தம் 128 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.

புதுச்சேரி கோா்காடு பகுதியைச் சோ்ந்த 72 வயதானவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 680 -ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.66 சதவீதம்.

புதுவை மாநிலத்தில் இதுவரை 40,964 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். தற்போது மருத்துவமனைகளில் 267 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 579 பேரும் என 846 போ் சிகிச்சையில் உள்ளனா். குணமடைந்தோா் எண்ணிக்கை 39,438.

மாநிலம் முழுவதும் இதுவரை 6,63,740 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதுவரை சுகாதாரத் துறைப் பணியாளா்கள் 24,389 பேகக்கும், முன்களப் பணியாளா்கள் 10,158 பேருக்கும், பொதுமக்கள் 25,928 பேருக்கும் என மொத்தம் 60,475 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.