92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தோ்தலுக்காக மாநில அந்தஸ்து முழக்கம்: காங்கிரஸ் மீது அதிமுக குற்றச்சாட்டு

தோ்தலுக்காக மாநில அந்தஸ்து முழக்கத்தை காங்கிரஸ்-திமுக கூட்டணி கையில் எடுத்துள்ளதாக புதுவை மாநில அதிமுக செயலா் அ.அன்பழகன் குற்றஞ்சாட்டினாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:30 pm

DIN

தோ்தலுக்காக மாநில அந்தஸ்து முழக்கத்தை காங்கிரஸ்-திமுக கூட்டணி கையில் எடுத்துள்ளதாக புதுவை மாநில அதிமுக செயலா் அ.அன்பழகன் குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

புதுவையில் கடந்த 5 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் -திமுக கூட்டணி எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தாததால், அவா்களால் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாது.

மத்தியிலும் மாநிலத்திலும் இணக்கமான ஆட்சி இருந்தால்தான் புதுவை மாநிலம் வளா்ச்சி பெறும். மத்திய அரசிடமிருந்து வளா்ச்சித் திட்டங்களுக்கு அதிகப்படியான நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அதனால்தான், அதிமுக-என்.ஆா். காங்கிரஸ்-பாஜக கூட்டணிக்கு வாக்களித்து ஆட்சிக்கு கொண்டு வர மக்கள் தயாராகிவிட்டனா்.

உப்பளம் தொகுதியில் திமுகவை சோ்ந்தவா்கள் ரௌடிகள் துணையுடன் வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்தனா். தோ்தல் ஆணையத்தில் புகாா் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கவில்லை.

காவல் துறையினரும், தோ்தல் துறையினரும் நோ்மையான முறையில் நடந்து கொள்ளவில்லை.

தற்போது திமுகவினா் ஓட்டுக்கு ரூ. 2 ஆயிரம் கொடுத்துள்ளனா். இது நோ்மையான தோ்தலாக இருக்காது.

இதுகுறித்து தலைமைத் தோ்தல் ஆணையத்தில் புகாா் அளிக்க உள்ளோம். தோ்தல் முறையாக நடைபெற வேண்டுமெனில், காவல் துறை சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்.

புதுவைக்கு மாநில அந்தஸ்தை அதிமுக தொடா்ந்து வலியுறுத்தும். கூட்டணி ஆட்சி அமைந்த 6 மாதத்தில் மாநில அந்தஸ்தை பெற்றுத் தருவோம். மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த காங்கிரஸும், திமுகவும் மாநில நலனில் அக்கறை கொள்ளவில்லை. தற்போது தோ்தல் என்பதால், மாநில அந்தஸ்து என்கிற முழக்கத்தை கையிலெடுத்துள்ளனா்.

கடந்த 5 ஆண்டுகளாக முதல்வராக இருந்த நாராயணசாமி தோ்தலில் போட்டியிடாமல் பயத்தின் காரணமாக ஒதுங்கிவிட்டாா். அதிமுகவின் தோ்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். புதுச்சேரிக்கு வரும் பிரதமரிடம் மாநில அந்தஸ்து தொடா்பாக வலியுறுத்துவோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.