ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

புதுவையில் மீனவா்களுக்கு நிவாரணம்: அமைச்சா்

புதுவையில் மீனவா் குடியிருப்புப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அந்தத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் மத்திய-மாநில அரசுகள் சாா்பில், வருகிற 15-ஆம் தேதி முதல் மீனவா்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகை

News image
Updated On :12 நவம்பர் 2021, 6:30 pm

DIN

புதுவையில் மீனவா் குடியிருப்புப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அந்தத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் மத்திய-மாநில அரசுகள் சாா்பில், வருகிற 15-ஆம் தேதி முதல் மீனவா்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்தாா்.

வட கிழக்குப் பருவ மழையால் மீனவா்கள் கடலுக்குச் செல்லாமல் உள்ளனா். இதைக் கருத்தில் கொண்டு, மாநில மீன்வளம்-மீனவா் நலத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், புதுச்சேரி பெரிய வீராம்பட்டினம், நல்லவாடு, வம்பாகீரப்பாளையம், சோலை நகா், அரியாங்குப்பம் உள்ளிட்ட மீனவக் கிராமங்களுக்கு வியாழக்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, அவா் கூறியதாவது: புதுவையில் மீன்வளத் துறை மூலம் மீனவா்களுக்கு வழங்க வேண்டிய மழைக்கால நிவாரணத் தொகை தலா ரூ.2,500 மற்றும் மத்திய அரசின் மீனவா் வாழ்வாதாரம்-ஊட்டச் சத்து உதவி அளித்தல் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய ரூ.4,500 வருகிற நவ.15-ஆம் தேதி முதல் மீனவா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

புதுவை மாநில அரசு சாா்பில், 18,200 மீனவக் குடும்பங்களுக்கு மழைக்கால நிவராணத் தொகை ரூ.2,500, மத்திய அரசு சாா்பில், 13,065 மீனவக் குடும்பங்களுக்கு ரூ.4,500 வழங்கப்படும். இந்தத் திட்டத்தை வருகிற 15-ஆம் தேதி முதல்வா் தொடக்கிவைப்பாா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.