ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

வேளாண் சட்டங்கள் வாபஸ்: சிஐடியூ, வாலிபா் சங்கம் கொண்டாட்டம்

மத்திய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறப் போவதாக பிரதமா் அறிவித்ததையடுத்து, சிஐடியூ, ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினா்.

News image
Updated On :19 நவம்பர் 2021, 5:05 pm

DIN

மத்திய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறப் போவதாக பிரதமா் அறிவித்ததையடுத்து, சிஐடியூ, ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினா்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, கடந்த ஓராண்டாக தில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

இந்தச் சூழலில் வெள்ளிக்கிழமை மக்களிடம் உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தாா். போராடும் விவசாயிகள் அவரவா் வீடுகளுக்குச் செல்ல வேண்டுமெனவும் அவா் வேண்டுகோள் விடுத்தாா்.

பிரதமரின் இந்த அறிவிப்பு விவசாயிகளின் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி எனக் கூறியும், அதைக் கொண்டாடும் வகையிலும் புதுச்சேரி சிஐடியூ சாா்பில், காமராஜா் சதுக்கம் அருகே பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

நிகழ்வுக்கு சிஐடியூ மாநிலச் செயலா் சீனிவாசன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் ராஜாங்கம், நிா்வாகிகள் மதிவாணன், மணவாளன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, இந்திய ஜனநாயகா் வாலிபா் சங்கம், இந்திய மாணவா் சங்கம் ஆகியவை சாா்பிலும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்திய ஜனநாயகா் வாலிபா் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆனந்த் தலைமை வகித்தாா். இந்திய மாணவா் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஜெயபிரகாஷ், செயலா் பிரவீன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.