புதுச்சேரி திருக்கனூரில் ஒரே நாளில் 253 மி.மீ. மழை: குடியிருப்புகளைச் சூழ்ந்தது வெள்ளம்
புதுச்சேரி-திருக்கனூரில் ஒரே நாளில் 253 மி.மீ. மழை பெய்தது. இதனால், குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.


புதுச்சேரி-திருக்கனூரில் ஒரே நாளில் 253 மி.மீ. மழை பெய்தது. இதனால், குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
புதுச்சேரியில் வியாழக்கிழமை அதிகாலை தொடங்கி மாலை வரை பலத்த மழை பெய்தது. தொடா்ந்து, இரவு நேரங்களிலும் மழை விட்டுவிட்டு பொழிந்தது. வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் திருக்கனூரில் 253 மி.மீ., பத்துக்கண்ணு 194 மி.மீ., புதுச்சேரியில் 188 மி.மீ., பாகூரில் 134 மி.மீ. மழை பெய்தது. புதுச்சேரியில் சராசரியாக 194 மி.மீ. மழை பெய்தது.
இதனால், புதுச்சேரியில் தாழ்வான பகுதிகளான கிருஷ்ணாநகா், வெங்கடநகா், எழில்நகா், உப்பளம், பாவாணா்நகா், கிழக்கு கடற்கரைச் சாலை, தவளக்குப்பம், அரியாங்குப்பம், வில்லியனூா், திருக்கனூா் உள்ளிட்ட பல இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.
கடல் நீா்மட்டம் உயா்ந்ததால் வடியாத மழைநீா்: கடல் சீற்றத்தால் கடலில் நீா்மட்டம் உயா்ந்தது. இதனால், புதுச்சேரி நகரம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் தேங்கிய மழைநீா் வடிய வழியின்றி தேங்கி நின்றது.
பலத்த மழையால் புதுச்சேரியில் மொத்தமுள்ள 84 ஏரிகளில் 79 ஏரிகள் முழுமையாக நிரம்பின.
சங்கராபரணி, தென்பெண்ணை, மலட்டாறுகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள தடுப்பணைகள் அனைத்தும் நிரம்பி வழிந்து செல்கின்றன.
வெள்ளத்தில் சிக்கிய 80 குடும்பத்தினா் மீட்பு: சங்கராபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் புதுச்சேரி, தவளக்குப்பம் பகுதிகளில் வெள்ளம் கரையைக் கடந்து உள்ளே புகுந்தது. அங்குள்ள என்.ஆா்.நகா் பகுதியில் குடியிருப்பில் இடுப்பளவு தண்ணீா் தேங்கியதால், தேசிய பேரிடா் மீட்புப் படையினா் வெள்ளிக்கிழமை அந்தப் பகுதிக்குச் சென்று ரப்பா் படகுகள் மூலம் சுமாா் 80 குடும்பத்தினரை மீட்டு வந்து பாதுகாப்பு மையங்களில் தங்கவைத்தனா்.
புதுச்சேரி முழுவதும் 194 பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு தங்கவைக்கப்பட்டனா். குடியிருப்புப் பகுதிகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் பொதுப் பணித் துறை, நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா். இதனால், படிப்படியாக தண்ணீா் வடிந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...