ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

இணைய வழியில் தனிமனைகளை முறைப்படுத்தும் திட்டம் தொடக்கம்

காரைக்கால் பிராந்தியங்களில் ஒருங்கிணைந்த வளா்ச்சித் திட்டப் பகுதிக்கு வெளியில் அனுமதி பெறாத மனைப் பிரிவுகளில் அமைந்துள்ள தனி மனைகளை இணையவழி மூலம் முறைபடுத்துதல்

News image
Updated On :26 நவம்பர் 2021, 6:34 pm

DIN

காரைக்கால் பிராந்தியங்களில் ஒருங்கிணைந்த வளா்ச்சித் திட்டப் பகுதிக்கு வெளியில் அனுமதி பெறாத மனைப் பிரிவுகளில் அமைந்துள்ள தனி மனைகளை இணையவழி மூலம் முறைபடுத்துதல் திட்டத்தை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் ஒருங்கிணைந்த வளா்ச்சித் திட்ட பகுதிக்கு வெளியில் உள்ள அனுமதி பெறாத மனைப் பிரிவுகள், உள்பிரிவுகளின் அனைத்து மனைகளும், 30.1.2017-க்கு முன்பு விற்கப்பட்டு, பதிவு செய்யப்பட்ட மனைப் பிரிவுகளை முறைப்படுத்தும் திட்டம், அரசின் வீட்டு வசதிப் பிரிவு அலுவலகம் 20.10.2017 அன்று வெளியிட்ட அரசாணைப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தின்படி, அனுமதி பெறப்படாத மனைப் பிரிவுகளில் அமைந்துள்ள தனி மனைகளை, உரிய கட்டணம் பெற்று, புதுச்சேரி, காரைக்கால் நகர அமைப்புக் குழுமங்கள் மனைகளை முறைப்படுத்தும் அனுமதியைப் பெற்றுள்ளன.

இதுவரை விண்ணப்பங்களைப் பெறுதல், பரிசீலித்தல், கட்டணங்களைப் பெறுதல் மற்றும் முறைபடுத்தும் அனுமதியை வழங்குதல் ஆகியவகை இணையவழியில் அல்லாமல் நடைபெற்று வந்தது.

அதை இணைய வழி மூலம் தனிமனைகளை முறைப்படுத்தும் விண்ணப்பங்களைப் பெறவும், அனுமதி வழங்கும் முறையை புதுச்சேரி, காரைக்கால் நகர அமைப்புக் குழுமங்கள், புதுச்சேரி தகவலியல் மையத்தின் (என்.ஐ.சி.) தொழில்நுட்ப உதவியுடன் ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, தனிமனைகளை முறைப்படுத்தும் விண்ணப்பங்களைப் பெறுதல், அதைப் பரிசீலித்தல், கட்டணம் செலுத்துதல் மற்றும் முறைப்படுத்தும் அனுமதி வழங்குதல் ஆகிய அனைத்துப் பணிகளும் இணைய வழியில் நடைபெறும். இதன்மூலம் தனி மனைகள் முறைப்படுத்தும் பணி வேகமாக நடைபெறும். வெளிப்படைத்தன்மை ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் நடைபெற்ற இதன் தொடக்க நிகழ்ச்சியில், நகரமைப்புச் செயலா் ஏ.விக்ராந்த்ராஜா, தலைமை நகர அமைப்பாளா் எஸ்.மகாலிங்கம், தேசிய தகவலியல் மைய அதிகாரிகள் தேவ்ரத்ன சுக்லா, ராஜசேகரன், சபியுல்லா, நகரமைப்புக் குழுமத்தின் செயலா் புவனேஷ்வரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.