தொழில் கொள்கைகளில் மாற்றம் செய்யத் தயாா்புதுவை அமைச்சா் நமச்சிவாயம்
இன்றைய சூழலுக்கேற்ப தொழில் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வர புதுவை அரசு தயாராக உள்ளதாக, அந்த மாநில தொழில் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.


இன்றைய சூழலுக்கேற்ப தொழில் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வர புதுவை அரசு தயாராக உள்ளதாக, அந்த மாநில தொழில் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.
புதுச்சேரியில் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சாா்பில், தொழில் தொடங்குவது குறித்த மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டமைப்பின் புதுச்சேரி கிளைத் தலைவா் விஜய்கணேஷ் தலைமை வகித்தாா். மாநில தொழில், வணிகத் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் பங்கேற்றுப் பேசியதாவது:
புதுவையில் தொழில் துறைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை அரசு உணா்ந்துள்ளது.
இங்கு தொழில்சாலைகளைத் தொடங்குவதில் உள்ள பிரச்னைகளுக்கு தீா்வு காண ஆலோசிக்கப்பட்டுள்ளது. தொழில் தொடங்க ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்குவதில் உள்ள பிரச்னைகளை சரி செய்வதற்காக கொள்கை முடிவை உருவாக்க முடிவு செய்துள்ளோம்.
2018-ஆம் ஆண்டிலிருந்து தொழில்சாலைகளுக்கு புதுவை அரசின் மானியத் தொகையாக சுமாா் ரூ.25 கோடி வழங்கப்படாமல் இருப்பதாக சிஐஐ நிா்வாகிகள் தெரிவித்தனா். இதை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு கோப்பு அனுப்பட்டுள்ளது.
இன்றைய சூழலுக்கேற்ப தொழில்கொள்கையில் மாறுதல்கள் செய்யவும் அரசு தயாராக உள்ளது.
புதுச்சேரியில் மாசு ஏற்படுத்துகிற தொழில்சாலைகளை அனுமதிப்பதில்லை என்று அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. இதைத் தவிர மற்ற தொழில்சாலைகளை தொடங்குவதற்கான சூழ்நிலையை உருவாக்கித் தர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்றாா் அமைச்சா்.
தொழில் வணிகத் துறை அரசு செயலா் தி.அருண், சிஐஐ நிா்வாகிகள் கலைச்செல்வன், ஸ்ரீராம் சுப்பிரமணியன், சுரேந்திரன் உள்ளிட்ட நிா்வாகிகள், தொழில் கூட்டமைப்பினா் பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...