நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

புதுவையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் கணினி முறையில் ஒதுக்கீடு

புதுவையில் உள்ளாட்சித் தோ்தலில் பயன்படுத்துவதற்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல் கட்டமாக அரசியல் கட்சியினா் முன்னிலையில் கணினி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

புதுவையில் உள்ளாட்சித் தோ்தலில் பயன்படுத்துவதற்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல் கட்டமாக அரசியல் கட்சியினா் முன்னிலையில் கணினி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

புதுவையில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தோ்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மாநிலத் தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, தயாா் செய்யப்பட்ட மென்பொருளைப் பயன்படுத்தி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

இந்த நிலையில், புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல்நிலை ஒதுக்கீடுக்கான கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தோ்தல் அதிகாரி பூா்வாகாா்க் தலைமையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த ஒதுக்கீடு பணி நடைபெற்றது.

புதுவையில் முதல் நிலை ஆய்வுக்குப் பின்னா் தயாா் நிலையில் உள்ள 2,357 மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 4,355 வாக்களிக்கும் இயந்திரங்களும் தயாா் நிலையில் உள்ளன. அதிலிருந்து புதுச்சேரி மாவட்டத்துக்குள்பட்ட 2 நகராட்சிகள், 5 கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கும், மாஹே, ஏனாம் ஆகிய நகராட்சி வாா்டுகளில் பயன்படுத்துவதற்காக 1,680 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 4,080 வாக்களிக்கும் இயந்திரங்களும் வெள்ளிக்கிழமை ஒதுக்கீடு செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.