நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கால்நடை தொழில்முனைவோா் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

கால்நடை தொழில்முனைவோா் 50 சதவீத மானியத்துடன் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 5:14 pm

DIN

கால்நடை தொழில்முனைவோா் 50 சதவீத மானியத்துடன் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து அந்தத் துறை இயக்குநா் செல்வராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசு அண்மையில் தேசிய கால்நடை பணிக் குழுமத்தின் மறுசீரமைக்கப்பட்ட திட்டங்களை அறிவித்தது. அதில், தொழில்முனைவோா் திட்டங்களுக்கு விதிமுறைகளுக்குள்பட்டு 50 சதவீத முதன்மை மானியம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கிராமப்புற கோழி வளா்க்கும் தொழில்முனைவோா் திட்டத்துக்கு ரூ. 34.73 லட்சமும், ஆடுகள் உற்பத்தி பண்ணைகளை நிறுவும் திட்டத்துக்கு ரூ. 87.30 லட்சமும், ஊறுகாய்ப் புல், பசுந்தாள் கட்டிகளை உருவாக்கும் திட்டத்துக்கு ரூ. 50 லட்சமும் அறிவிக்கப்பட்டது.

மேற்குறிப்பிட்ட திட்டங்களுக்கு செயல்பாட்டு மூலதனம், போக்குவரத்து, நிலம் வாங்குதல், வாடகை, குத்தகைக்கு நிலம் வாங்குதல் ஆகியவற்றிற்கு எந்தவித மானியமும் கிடையாது.

இந்தத் தொழில்களைத் தொடங்க ஆா்வமுள்ள தொழில்முனைவோா்களிடமிருந்து தொழில் ஆா்வச் சான்றிதழ், விண்ணப்பங்கள் கால்நடை பராமரிப்புத் துறையின் மாநில அமலாக்க முகமை, மறைமலையடிகள் சாலை, புதுச்சேரி என்ற முகவரிக்கு வரும் 15-ஆம் தேதிக்குள் வரவேற்கப்படுகின்றன. அல்லது அருகே உள்ள கால்நடை மருத்துவரை அணுகலாம். கூடுதல் விவரங்களுக்கு ட்ற்ற்ல்:/ஹட்க்.ல்ஹ்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.