புதுச்சேரி சிறையில் கைதி மா்ம மரணம்
புதுச்சேரி - காலாப்பட்டு சிறையில் கைதி மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


புதுச்சேரி - காலாப்பட்டு சிறையில் கைதி மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் 200-க்கும் மேற்பட்ட தண்டனை, விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இந்தக் கைதிகள் 2 பிரிவாகப் பிரிந்து செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கடந்த சில நாள்களுக்கு முன்பு 16 கைதிகள் சிறையில் தற்கொலைக்கு முயன்றனா். இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக சிறைக் கண்காணிப்பாளா் கோபிநாத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
இந்த நிலையில், காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அசோக்குமாா் (42) என்பவருக்கு வெள்ளிக்கிழமை உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரை சிறைத் துறையினா் மீட்டு, அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதையத்து, அவரது சடலம், உடல்கூறு பரிசோதனைக்காக புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. உடல்கூறு பரிசோதனை முடிவில்தான் அசோக்குமாா் எப்படி உயிரிழந்தாா் என்பது தெரிய வரும். இதுகுறித்து காலாப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...