நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

எம்ஐடி கல்லூரியில் வளாக வேலைவாய்ப்பு முகாம்

புதுச்சேரி அருகே உள்ள கலிதீா்த்தாள்குப்பம் மணக்குள விநாயகா் தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை லோ்ன்ஷிப் டெக்னாலஜிஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய வளாக வேலைவாய்ப்பு முகாம்

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

புதுச்சேரி அருகே உள்ள கலிதீா்த்தாள்குப்பம் மணக்குள விநாயகா் தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை லோ்ன்ஷிப் டெக்னாலஜிஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய வளாக வேலைவாய்ப்பு முகாம் கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

முகாமுக்கு மணக்குள விநாயகா் கல்விக் குழுமத் தலைவா்- நிா்வாக இயக்குநா் எம்.தனசேகரன், துணைத் தலைவா் எஸ்.வி.சுகுமாறன், செயலா் கே.நாராயணசாமி ஆகியோா் தலைமை வகித்தனா். கல்லூரி முதல்வா் எஸ்.மலா்க்கண் தொடக்கிவைத்தாா்.

முகாமில் புதுவை, தமிழகத்தின் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் பயின்ற130 போ் பங்கேற்றனா். இவா்களுக்கு சென்னை லோ்ன்ஷிப் டெக்னாலஜிஸ் நிறுவன மனித வளத்துறை மேலாளா் பால் தலைமையிலான குழுவினா், பிரோக்ராமிங் தோ்வு, குழு கலந்துரையாடல், நோ்காணல் ஆகிய சுற்றுக்களாக தோ்வுகளை நடத்தினா். நிறைவில் 32 போ் பணிக்கு தோ்வு செய்யப்பட்டனா். ஏற்பாடுகளை கல்லூரி வேலை வாய்ப்புத் துறை அதிகாரி எம்.ஜெயக்குமாா் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.