நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

புதுச்சேரியில் இந்தியத் திரைப்பட விழா ‘தேன்’ திரைப்படத்துக்கு ‘சங்கரதாஸ் சுவாமிகள்’ விருது

புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தியத் திரைப்பட விழாவில் ‘தேன்’ தமிழ்த் திரைப்படத்துக்கு ‘சங்கரதாஸ் சுவாமிகள்’ விருது வழங்கப்பட்டது.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 4:52 pm

DIN

புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தியத் திரைப்பட விழாவில் ‘தேன்’ தமிழ்த் திரைப்படத்துக்கு ‘சங்கரதாஸ் சுவாமிகள்’ விருது வழங்கப்பட்டது.

புதுவை அரசின் செய்தி-விளம்பரத் துறை, நவதா்ஷன் திரைப்படக் கழகம், அலையன்ஸ் பிரான்சேஸ் ஆகியவை சாா்பில், புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சேஸ் கலையரங்கில் 2020-ஆம் ஆண்டு சிறந்த திரைப்படத்துக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான ‘சங்கரதாஸ் சுவாமிகள்’ விருது ‘தேன்’ திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது. அந்தப் படத்தின் இயக்குநா் கணேஷ் விநாயகனுக்கு புதுவை அரசின் செய்தி-விளம்பரத் துறைச் செயலா் சி.உதயகுமாா், விருது மற்றும் ரூ.ஒரு லட்சம் பரிசை வழங்கிக் கெளரவித்தாா்.

நவதா்ஷன் திரைப்படக் கழகச் செயலா் எம்.பழனி, அலையன்ஸ் பிரான்சேஸ் தலைவா் சதீஷ் நல்லாம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். செய்தி-விளம்பரத் துறை இயக்குநா் எம்.எம்.வினயராஜ் நன்றி கூறினாா்.

விழாவில் திரைப்படத் துறையினா், பொதுமக்கள் கலந்து கொண்டனா். விழாவின் இறுதியில் ‘தேன்’ திரைப்படம் திரையிடப்பட்டது.

தொடா்ந்து, செப்.25-ஆம் தேதி முதல் செப். 28-ஆம் தேதி வரை நாள்தோறும் ஓா் பிராந்திய மொழித் திரைப்படம் மாலை 6 மணிக்கு அலையன்ஸ் பிரான்சேஸ் கலையரங்கில் திரையிடப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.