நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

புதுவை கால்நடைத் துறை அதிகாரி: ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம்

புதுவை கால்நடைத் துறை அதிகாரி ஓய்வு பெறும் நாளில் (செப்.30) பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

புதுவை கால்நடைத் துறை அதிகாரி ஓய்வு பெறும் நாளில் (செப்.30) பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

புதுவை கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநராக இருந்த பத்மநாபன் மீது கடந்த 2018-ஆம் ஆண்டு, அங்கு பணிபுரிந்த பெண் மருத்துவா் பாலியல் புகாா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக துறை ரீதியான குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. இதனிடையே, பெண் மருத்துவருடன் பத்மநாபன் பேசியதாகக் கூறப்படும் உரையாடல், சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் பத்மநாபன், அரசின் பாண்கோ் துறைச் செயலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் மருத்துவா், புதன்கிழமை அவசர மனுவை சென்னை உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தாா். அதில், கால்நடைத் துறை முன்னாள் அதிகாரி பத்மநாபன், தன் மீதான விசாரணையை ரத்து செய்யக் கோரி ஏற்கெனவே வழக்குத் தொடுத்தாா். அந்த வழக்கில் 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகளாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில், பத்மநாபன் செப்.30-ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறாா். எனவே, எனது மனுவை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனுவின் மீதான வழக்கு காணொலி வாயிலாக உயா் நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, பாலியல் புகாருக்கு உள்ளான பத்மநாபனை பணியிடை நீக்கம் செய்ய புதுவை தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டாா்.

இதையடுத்து, வியாழக்கிழமை (செப்.30) பணி ஓய்வு பெறும் நாளில் பத்மநாபன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.