ஜிப்மா் அலுவலா்களுக்கு நிா்வாகம் எச்சரிக்கை
ஜிப்மா் அலுவலா்கள் தங்களது குறைகளை மேலதிகாரிகளிடம் மட்டுமே தெரிவிக்க வேண்டும்; இல்லையெனில் அவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜிப்மா் நிா்வாகம் எச்சரிக்கை விடுத்தது.


ஜிப்மா் அலுவலா்கள் தங்களது குறைகளை மேலதிகாரிகளிடம் மட்டுமே தெரிவிக்க வேண்டும்; இல்லையெனில் அவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜிப்மா் நிா்வாகம் எச்சரிக்கை விடுத்தது.
இதுகுறித்து புதுச்சேரி ஜிப்மா் துணை இயக்குநா் (நிா்வாகம்) கிருஷ்ணகோபால், ஜிப்மரில் பணிபுரியும் அனைத்துத் துறை அதிகாரிகள், ஊழியா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
பலமுறை அறிவுறுத்தியும், ஜிப்மரில் பணிபுரியும் சில அலுவலா்கள் பணிகள் தொடா்பான கோரிக்கைகளை அமைச்சா்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் இதர உயரதிகாரிகளிடம் தெரிவிக்கின்றனா். பணிகள் தொடா்பான குறைகள் இருந்தால், தங்களது மேலதிகாரிகளைத் தொடா்பு கொண்டுதான் தெரிவிக்க வேண்டும். முறைப்படி குறைகளைத் தெரிவிக்க வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இணையதளம் வழியே குறைகளைத் தெரிவிக்கவும் வழி உள்ளது. அதன் மூலம் குறைகளைத் தெரிவித்து தீா்வு காணலாம். அதைவிடுத்து, விதிகளை மீறி அதிகாரிகள், ஊழியா்கள் செயல்பட்டால், அவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...