எரிபொருள் விலை ஏற்றம் சாதாரண மக்கள் மீது தொடுக்கும் வன்முறை: கரூர் எம்பி ஜோதிமணி 

எரிபொருள் விலை ஏற்றம் சாதாரண மக்கள் மீது தொடுக்கும் வன்முறை என்று கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி விமர்சித்துள்ளார்.
எரிபொருள் விலை ஏற்றம் சாதாரண மக்கள் மீது தொடுக்கும் வன்முறை: கரூர் எம்பி ஜோதிமணி 

எரிபொருள் விலை ஏற்றம் சாதாரண மக்கள் மீது தொடுக்கும் வன்முறை என்று கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து புதுச்சேரியில், வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்தித்த அவர் கூறியதாவது: தற்போது கரோனா காலத்திலும் எரிபொருள் விலை ஏற்றம், பொது மக்களை கடுமையாக பாதித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஏழு ஆண்டுகளில் 23 கோடி பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே வந்துள்ளனர். 

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, விவசாயப் பொருட்களுக்கும், பிரதமர் மோடி தலைமையிலான அரசு வரி விதித்துள்ளது. தோல்வியடைந்த மத்திய அரசால், தற்போது பொருளாதாரம் சரிவடைந்துள்ளது. பெட்ரோல் தற்போது ரூ.100 தாண்டியுள்ளது. இதனால் ஏழை, எளியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 6 மாதங்களில் 66 முறை பெட்ரோல்,டீசல் விலை உயர்ந்துள்ளது. பாஜக ஆட்சியில் கடந்த 7 ஆண்டுகளில் கலால் வரி 23 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. கலால் வரி உயர்த்தப்பட்டதால் தான் அனைத்தும் விலை உயர்ந்து வருகிறது. விலை உயர்வால் பணவீக்கம் அதிகரித்துள்ளது.

வரி உயர்வால் மத்திய அரசு ரூ.24 லட்சம் கோடி  கொள்ளையடித்துள்ளது. பால், எண்ணெய், நெய், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு என அனைத்தும் விலை உயர்ந்து விட்டது. இன்று காங்கிரஸ் சார்பில் அனைத்து மாநிலங்களிலும், மத்திய அரசின் ஊழலை வெளிக் கொண்டுவரும் நிகழ்வு தொடங்கியுள்ளது என்றார்.

முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்பி வைத்திலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com