புதுவையில் அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி: அமைச்சர் ஏ. நமச்சிவாயம்

புதுவையில் அனைத்து காவல்நிலையங்களிலும் ரூ.2 கோடி செலவில் சிசிடிவி பொறுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுவையில் அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி: அமைச்சர் ஏ. நமச்சிவாயம்

புதுவையில் அனைத்து காவல்நிலையங்களிலும் ரூ.2 கோடி செலவில் சிசிடிவி பொறுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதுவை சட்டப்பேரவையில் உள்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம் வெளியிட்ட அறிவிப்பு, புதுவையில் அனைத்து காவல்நிலையங்கள் ரூ.2 கோடியில் சிசிடிவி நிறுவி அதன் மூலம் ஒருங்கிணைத்து கண்காணிக்கபடும்.

இரவு 10 மணியிலிருந்து அதிகாலை வரை, தனியாக பேருந்து மூலம் வரும் பெண்கள், அவசர உதவிக்கு 112 எண்ணை தொடர்பு கொண்டால், போலீஸ் வாகனம் மூலம், அவர்களை வீட்டிற்கே அழைத்து செல்லப்படும் திட்டம் இந்தாண்டு முதல் உருவாக்கப்படும்.

புதுச்சேரியில், போலீஸ் ஸ்பாட் ஃபைன் போடும் திட்டத்தை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் கடந்த ஆண்டு கட்டணத்தை வசூலிக்கவும், நீதிமன்ற உத்தரவுப்படி அதில் 75  சதவீதம் கட்டணம் வசூலிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அப்ரேஷன் விடியல் முலம் கஞ்சா போன்ற போதை பொருள் வைத்திருந்த 38 குற்ற வழக்கு 36 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து 84 பேர் கைது. ஆந்திரம் சென்று கஞ்சா வழக்கில் மாவோயிஸ்ட் கைது செய்த ரெட்டியார்பாளையம் காவல் நிலையம் சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்களுக்கு பாராட்டு, விரைவில் அவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com