நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதுவையில் குப்பை வரி ரத்து, தண்ணீர் வரி குறைப்பு: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுவையில் வீடுகளில் உயர்த்தப்பட்ட தண்ணீர் வரி ரூ.3 குறைக்கப்படுவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

News image

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.

Updated On :3 செப்டம்பர் 2021, 12:37 pm

DIN

புதுவையில் வீடுகளில் உயர்த்தப்பட்ட தண்ணீர் வரி ரூ.3 குறைக்கப்படுவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் நிறைவு நாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்று வருகிறது. நிறைவாக முதல்வர் என். ரங்கசாமி பதிலளித்துப் பேசிவருகிறார். 

அவர் பேசுகையில், மானியக் கோரிக்கைகள் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்த கோரிக்கைகளுக்கு, அமைச்சர்கள் பதில் அளித்துள்ளனர்.

பல்வேறு அறிவிப்புகளும், அறிவித்துள்ளனர். அவை அனைத்தும் இந்த ஆட்சியில் நிறைவேற்றப்படும். தேவைப்படும் அனைத்து ஏழை எளியோருக்கும் இலவச மனைப்பட்டா வழங்கப்படும். மாநில அந்தஸ்து பெறுவது குறித்தான நடவடிக்கை அரசு எடுக்கும். வீடுகளுக்கு போடப்பட்ட குப்பைவரி ரத்து செய்யப்படும்.

வீடுகளில் உயர்த்தப்பட்ட தண்ணீர் வரி ரூ.3 குறைக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.