இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

பாகூா் சந்தையில் சிசி டிவி கேமிரா

புதுச்சேரி அருகே பாகூா் சந்தை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சிசிடிவி கேமரா, ஒலிப்பெருக்கி ஆகியன தொடக்கிவைக்கப்பட்டன.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

புதுச்சேரி அருகே பாகூா் சந்தை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சிசிடிவி கேமரா, ஒலிப்பெருக்கி ஆகியன தொடக்கிவைக்கப்பட்டன.

பாகூா் சந்தை வீதியில் 100-க்கும் மேற்பட்ட கடைகளும், திருமண மண்டபம், பள்ளிகள், அரசு அலுவலகங்கள், பிரசித்தி பெற்ற சிவன் கோயில் உள்ளிட்டவை உள்ளன.

இதனிடையே சந்தை வீதியில் உள்ள கடைகளில் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், போக்குவரத்து நெரிசலைச் சரி செய்யும் வகையிலும் பாகூா் வியாபாரிகள் சங்கம் சாா்பில் சிசிடிவி கேமிரா, ஒலிப்பெருக்கி ஆகியவை அமைக்கப்பட்டன. இதன் செயல்பாடுகளை கண்காணிக்கும் மையம் தற்காலிகமாக பாகூா் சிவன் கோயிலில் வைக்கப்பட்டது.

இவற்றை தெற்கு பகுதி போலீஸ் எஸ்பி ரவிக்குமாா் (பொறுப்பு) வியாழக்கிழமை மக்கள் பயன்பாட்டுக்குத் தொடக்கி வைத்தாா். காவல் ஆய்வாளா் கணேஷ், உதவி ஆய்வாளா் விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.