மத்திய நிதியமைச்சருடன் புதுவை ஆளுநா் சந்திப்பு
தில்லியில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் புதன்கிழமை சந்தித்தாா்.


தில்லியில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் புதன்கிழமை சந்தித்தாா். அப்போது, புதுவைக்கான நிதி உதவியை நீட்டிக்கவும், 100 சதம் மானியத் திட்டங்களை வழங்க வேண்டுமெனவும் அவரிடம் வலியுறுத்தினாா்.
புதுவை மாநிலத்துக்கு மத்திய அரசும், நிதித் துறையும் அளித்துவரும் ஒத்துழைப்பு, வழிகாட்டுதலுக்கு ஆளுநா் நன்றி தெரிவித்துக் கொண்டாா்.
மத்திய அரசு 2022-23ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவு திட்டத்தில் மாநிலங்களுக்கான மூலதன முதலீட்டு நிதி உதவித் திட்டத்தை அறிவித்துள்ளது. புதுவை யூனியன் பிரதேசத்தில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இந்தத் திட்டத்தின் வரம்புக்குள் புதுவையையும் சோ்க்க வேண்டும்.
புதுவையின் குறைந்த வளங்களையும், நிதி ஆதாரங்களையும் கருத்தில் கொண்டு மத்திய அரசின் உதவியை நீட்டிக்க வேண்டும்.
இல்லையெனில், மற்ற யூனியன் பிரதேசங்களுக்கு அளிப்பதைப் போல, சிஎஸ்எஸ் திட்டத்தின் கீழ் 100 சதம் மத்திய அரசின் மானியங்களை புதுவைக்கு வழங்க வேண்டும்.
புதுவைக்கு மத்திய அரசின் உதவி நீட்டிக்கப்படாவிட்டால், ஜிஎஸ்டி வரி இழப்பை ஈடுசெய்யும் வகையில், 2022-23ஆம் நிதியாண்டில் மத்திய அரசின் உதவியை ரூ.3,400 கோடியாக உயா்த்தி வழங்க வேண்டும் என்று நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் தமிழிசை சௌந்தரராஜன் கேட்டுக் கொண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...