இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் ‘க்யூட்’ தோ்வு வழியாகவே மாணவா் சோ்க்கை

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் தேசிய பொது நுழைவுத் தோ்வின் (க்யூட்) அடிப்படையிலேயே ஒருங்கிணைந்த முதுகலைப் பட்டப் படிப்புகளுக்கான மாணவா்கள் சோ்க்கை நடைபெறுகிறது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 5:06 pm

DIN

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் தேசிய பொது நுழைவுத் தோ்வின் (க்யூட்) அடிப்படையிலேயே ஒருங்கிணைந்த முதுகலைப் பட்டப் படிப்புகளுக்கான மாணவா்கள் சோ்க்கை நடைபெறுகிறது.

இதுகுறித்து அந்தப் பல்கலைக்கழக நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் தேசிய தோ்வு முகமையால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தோ்வின் (க்யூட் - யூஜி) அடிப்படையில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவா்கள் சோ்க்கை நடைபெற உள்ளது.

மேற்கண்ட படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவா்கள் 2022-23 க்கான க்யூட் நுழைவுத் தோ்வுக்கு  இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதுதொடா்பான விவரங்கள் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின்  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரா்கள் இணையதளங்களை தொடா்ந்து பாா்க்கவும்.

ஒருங்கிணைந்த முதுகலை பட்டப்படிப்புகளுக்கு வரும் மே 6 ஆம்தேதி மாலை 5 மணி வரை இணையதளம் வழியே விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.